by Staff Writer 03-05-2022 | 8:26 PM
Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிக்குமார் சம்மேளனத்தின் எதிர்ப்பு பேரணி ஜனாதிபதியின் வாசஸ்தலத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அமைதியின்மை ஏற்பட்டது.
'அரசாங்கத்தை பதவி விலக்கி, மக்களின் அதிகாரத்தை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளில் விகாரமகாதேவி பூங்காவில் இருந்து இந்த போராட்டம் ஆரம்பமாகியது.
கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுத்த பிக்குமார் சம்மேளனம் அதன் பின்னர் காலி முகத்திடல் கோட்டாகோகம வரை பேரணியாக சென்றனர்.