கூட்டத்தில் கலந்துகொள்ள நிபந்தனை விதித்துள்ள SLFP

ஜனாதிபதியுடனான கூட்டத்தில் கலந்துகொள்ள நிபந்தனை விதித்துள்ள சுதந்திரக் கட்சி

by Bella Dalima 28-04-2022 | 5:03 PM
Colombo (News 1st) சுரேன் ராகவன் மற்றும் சாந்த பண்டார ஆகியோரை அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்காவிட்டால், நாளை (29) நடைபெறவுள்ள சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான ஜனாதிபதியுடனான கூட்டத்தில் கலந்துகொள்ளாதிருக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவும் பாராளுமன்ற குழுவும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமெனில், சாந்த பண்டாரவும் சுரேன் ராகவனும் அவர்களின் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்துள்ளதாக தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார். "இது எங்கள் கட்சியால் மட்டுமே எட்டப்பட்ட முடிவு. சுயேட்சையாக மாற முடிவு செய்தவர்கள் உட்பட, மற்ற கட்சிகளும் உள்ளன. எங்களுடன் 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இது ஒரு கூட்டு முடிவாக இருக்க வேண்டும், ஏனெனில் நாங்கள் தனியாக முடிவு செய்ய முடியாது, " என அவர் மேலும் கூறினார்.