இன்று 3மணித்தியாலங்கள் 20நிமிடங்களுக்கு மின்வெட்டு

இன்று 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

by Staff Writer 23-04-2022 | 7:48 AM
Colombo (News 1st) இன்று (23) 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. A முதல் L வரையான வலயங்களிலும் P முதல் W வரையான வலயங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, பிற்பகல் 5 மணி முதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 20 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.