by Bella Dalima 22-04-2022 | 5:08 PM
Colombo (News 1st) இந்திய கடனுதவியின் கீழ் வாராந்தம் 1500 மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாக பல்நோக்கு வணிக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும் 16,000 மெட்ரிக் தொன் அரிசி, கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் குறிப்பிட்டார்.
சதொச கிளைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக அரிசியை சலுகை விலையில் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்திய கடன் உதவியின் கீழ் மேலும் 26,000 மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு கிடைக்க உள்ளதாக பல்நோக்கு வணிக கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.