by Staff Writer 18-04-2022 | 2:59 PM
Colombo (News 1st) தமிழ் - சிங்கள புதுவருடப்பிறப்பு காரணமாக மூடப்பட்டிருந்த கெரவலப்பிட்டிய எரிவாயு களஞ்சியசாலை இன்று(18) மீள திறக்கப்பட்டது.
எனினும், இன்றைய தினம்(18) பொதுமக்களின் வீட்டுப் பாவனைக்காக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுனம் அறிவித்துள்ளது.
வர்த்தக செயற்பாடுகளுக்கு மாத்திரமே தங்களிடம் கையிருப்பிலுள்ள எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று(18) நாட்டை வந்தடையவுள்ளதாகவும் நாளை(19) முதல் வழமைபோல சந்தைக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.