காணாமற்போயிருந்த ஏனைய இருவரின் சடலங்களும் மீட்பு

இறம்பொ​டை நீர்வீழ்ச்சியில் காணாமற்போயிருந்த ஏனைய இருவரின் சடலங்களும் மீட்பு

by Staff Writer 14-04-2022 | 10:36 PM
Colombo (News 1st) நுவரெலியா - இறம்பொ​டை நீர்வீழ்ச்சியை அண்மித்து குளிக்கச்சென்று காணாமற்போன ஏனைய இருவரின் சடலங்களும் இன்று மீட்கப்பட்டன. வவுனியாவிலிருந்து சென்ற சிலர், நேற்று முன்தினம் (12) பிற்பகல் நீர்வீழ்ச்சியை அண்மித்த பகுதிக்கு குளிக்கச்சென்றிருந்தனர். நீரின் வேகம் அதிகரித்தமையினால் 07 பேர் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர். அவர்களில் நால்வர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமற்போன ஏனைய மூவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , நேற்று பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் ஏனைய இருவரின் சடலங்களும் இன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலங்கள் சட்டவைத்திய அதிகாரியின் மரண பரிசோதனைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.