இந்தியாவிலிருந்து 40,000 மெட்ரிக் தொன் அரிசி

இந்தியாவிலிருந்து 40,000 மெட்ரிக் தொன் அரிசி

by Staff Writer 11-04-2022 | 4:12 PM
Colombo (News 1st) இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் 40,000 மெட்ரிக் தொன் அரிசியில் ஒரு பகுதி, இன்று(11) நாட்டை வந்தடையவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டிற்கு கிடைக்கும் குறித்த தொகை அரிசி, சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் என அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். சதொச ஊடாக ஒரு கிலோ கிராம் நாட்டரிசி மற்றும் பச்சையரிசி 110 ரூபாவிற்கும் ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி 130 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, புத்தாண்டு காலத்தில் மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படுவதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பால் மாவிற்கு மாத்திரம் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறையவடையக்கூடும் எனவும் அவர் கூறினார்.