by Staff Writer 08-04-2022 | 3:59 PM
Colombo (News 1st) தெல்தெனிய - ரங்கல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வீட்டில் இருக்கும் போது இன்று அதிகாலை அங்கு சென்ற 04 பேர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இதன்போது, 38 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து சென்று குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்த ஒருவரே சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டவர்கள் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.