ஏப்ரல் 11, 12 ஆம் திகதிகள் பொது விடுமுறை தினங்கள்

ஏப்ரல் 11, 12 ஆம் திகதிகள் பொது விடுமுறை தினங்களாக அறிவிப்பு

by Bella Dalima 07-04-2022 | 4:29 PM
Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை பொது விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு இந்த விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.