விலைவாசி உயர்வால் போராட்டம்:பெருவில் ஊரடங்கு

விலைவாசி உயர்வால் மக்கள் போராட்டம்: பெருவில் ஊரடங்கு அறிவிப்பு

by Bella Dalima 05-04-2022 | 4:07 PM
Colombo (News 1st) விலைவாசி உயர்வு காரணமாக பெருவில் போராட்டம் வெடித்துள்ள நிலையில், ஊரடங்கை அமுல்படுத்துவதாக அந்நாட்டு ஜனாதிபதி பெட்ரோ காஸ்டில்லோ (Pedro Castillo) அறிவித்துள்ளார். பெருவில் கடந்த சில நாட்களாக எரிபொருள் மற்றும் உரங்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தலைநகர் லிமாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அரசுக்கெதிரான போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பெரு குடியரசுத் தலைவர் பெட்ரோ காஸ்டில்லோ தலைநகரில் ஊரடங்கை இன்று அறிவித்தார். மேலும், போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளதாகவும் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளதாகவும் பெரு அரசு தெரிவித்துள்ளது.