20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல்

கோவளம் கடற்பகுதியில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல்

by Bella Dalima 31-03-2022 | 5:04 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கோவளம் கடற்பகுதியில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது. சந்தேகநபர்களிடமிருந்து 66 கிலோ 600 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 20 முதல் 24 வயதிற்கு இடைப்பட்ட முல்லைத்தீவு மற்றும் மாதகல் பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.