பொது போக்குவரத்தில் தாக்கம் செலுத்தும் எரிபொருள் நெருக்கடி

by Staff Writer 30-03-2022 | 1:55 PM
Colombo (News 1st) எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுப் போக்குவரத்து சேவைக்கும் பாரிய இடையூறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 25 வீதமான தனியார் பஸ்கள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபடுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இன்று(30) தெரிவித்துள்ளார். இதேவேளை, 06 டிப்போக்களுக்கு கோரப்பட்ட எரிபொருள் கிடைக்கவில்லை எனவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது. நெரிசல் மிகு சந்தர்ப்பங்களில் பஸ் சேவைகளின் முன்னுரிமை அடிப்படையில் அட்டவணை தயாரிக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் ஏ.எச்.பந்துல ஸ்வரனஹன்ச தெரிவித்துள்ளார்.