யாழ்.கலாசார மத்திய நிலையம் திறந்து வைப்பு

by Staff Writer 28-03-2022 | 8:10 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மத்திய நிலையம் இன்று (28) திறந்து வைக்கப்பட்டது. இந்திய நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார நிலையம், மெய்நிகர் வழியூடாக திறந்து வைக்கப்பட்டது. அலரி மாளிகையில் இருந்து இந்திய வௌியுறவு துறை அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மெய்நிகர் ஊடாக கட்டடத்தை திறந்து வைத்தார். அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்துகொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ். இந்திய துணைத் தூதுவர் ராக்கேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், எஸ்.சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஆனந்த சங்கரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது, இந்திய அரசாங்கத்தினால் கலாசார மத்திய நிலையமொன்று அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தார். அதற்கமைய, 1.6 பில்லியன் ரூபா செலவில் இந்த கலாசார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.