by Staff Writer 27-03-2022 | 2:38 PM
Colombo (News 1st) இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம்(IMF) வௌியிட்டுள்ள அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக சமுர்த்தி, சுயதொழில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையை மதிப்பீடு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம், இலங்கை தொடர்பிலான தமது அறிக்கையை நேற்று(26) வௌியிட்டது.
நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பில் 5 யோசனைகளையும் நிதியம் முன்வைத்துள்ளது.
எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணத்தை தீர்மானிப்பதற்கு இலங்கை தன்னியக்க செயன்முறையொன்றை பின்பற்றுவது அவசியம் என சர்வதேச நாணய நிதியம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.