by Bella Dalima 24-03-2022 | 4:49 PM
Colombo (News 1st) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்து M.S.தோனி விலகியுள்ளதால், ஜடேஜா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
IPL 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டது. அதில் முதல் வீரராக ஜடேஜாவை தக்கவைத்தது. இதனால் தோனி தலைவர் பதவியில் நீடிப்பது குறித்து விவாதம் எழுந்தது.
இதன்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தோனி தலைவராக செயற்படுவார் என தெரிவித்தது.
நாளை மறுதினம் (26) IPL 2022 சீசன் ஆரம்பமாகிறது. இந்த நிலையில், இன்று தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால், ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக செயற்படவுள்ளார்.
தோனி தலைவர் பதவியில் இருந்து விலகினாலும் வீரராக அணியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.