வரிசைகளில் காத்திருக்கும் மக்களின் தாகம் தீர்க்கும் V-Force குழுவினர்

by Bella Dalima 22-03-2022 | 8:02 PM
Colombo (News 1st) அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள பல மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு இன்றும் மக்கள் சக்தி V-Force குழுவினரால் குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டன. நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் இன்றும் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டன. கடும் வெயிலுக்கு மத்தியில் வரிசைகளில் காத்திருக்கும் மக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மக்கள் சக்தி V-Force குழுவினரால் வரிசைகளில் நிற்கும் மக்களுக்கு இயலுமானளவு குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டன. American Premium Water நிறுவனம் உள்ளிட்ட நன்கொடையாளர்கள் இந்த திட்டத்திற்காக V-Force-உடன் இணைந்துள்ளனர். மக்களுக்கு குடிநீரை வழங்கிய பின்னர் வெற்று போத்தல்களை சேகரிக்கும் நடவடிக்கையிலும் V-Force குழுவினர் ஈடுபட்டனர்.