Colombo (News 1st) உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் பிரபல நடிகை ஒக்சானா ஸ்வெட்ஸ் (Oksana Shvets) உயிரிழந்தார்.
கீவ் நகரில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது ரஷ்ய படைகள் ராக்கெட் குண்டுகளை ஏவி தாக்கியதில், கட்டிடத்தில் இருந்து 67 வயதான பழம்பெரும் பிரபல நடிகை ஒக்சான ஸ்வெட்ஸ் பலியானார்.
இவர் உக்ரைனின் உயரிய திரையுல விருதுகளை பெற்றுள்ளார்.
உக்ரைனிய இராணுவ உட்கட்டமைப்பை மட்டுமே குறி வைத்து இந்த சிறப்பு தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் அறிவிப்பின் படி, உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் தொடங்கியதில் இருந்து பொதுமக்களில் சுமார் 600 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
