by Staff Writer 17-03-2022 | 8:07 PM
Colombo (News 1st) புத்த பகவானின் வாழ்க்கையில் முக்கியமான பல நிகழ்வுகள் இடம்பெற்ற மெதின் முழு நோன்மதி தினம் இன்றாகும்.
பங்குனி மாதத்தில் வருகின்ற நோன்மதி தினத்தில், நன்றிக்கடன் செலுத்தும் உயரிய பண்பை போதிக்கும் வகையில், புத்த பகவான் தாம் பிறந்த நகருக்கு சென்றதாக பௌத்த வரலாறு கூறுகின்றது.
இதனை முன்னிட்டு இன்று விகாரைகளில் வழிபாடுகள் நடைபெற்றன.
பிரதமர் மஹிந்த ரஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, ஒவ்வொரு மாதமும் நோன்மதி தினத்தில் நடைபெறுகின்ற தர்ம போதனை நிகழ்வு இன்றும் அலரி மளிகையில் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற தர்ம போதனை நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டிருந்தார்.
கெப்பிட்டல் மகாராஜா குழுமத் தலைமையக வளாகத்தில் ஶ்ரீ ஷக்கிய மாலகயவில் உள்ள புத்தர் சிலைக்கு அருகே PE+ நிறுவன ஊழியர்களின் ஏற்பாட்டில் வழிபாடுகள் நடைபெற்றன.