by Staff Writer 17-03-2022 | 8:12 PM
Colombo (News 1st) வரலாற்று சிறப்புமிக்க ரனால, அம்புல்கல ரஜமகா விகாரைக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட ஶ்ரீ மகா போதியின் கிளையை நடும் நிகழ்வு இன்று முற்பகல் நடைபெற்றது.
விசேட ஊர்வலத்தின் ஊடாக ஶ்ரீ மகாபோதி கிளை விஹாரைக்கு கொண்டுவரப்பட்டது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட போதி பீடத்தில் ஶ்ரீ மகாபோதியின் கிளையை நடும் நிகழ்வு கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் சஷி ராஜமகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
விகாராதிபதி தங்கந்தே போதிவங்ஸ தேரரின் ஆலோசனைக்கு அமைய இந்த நிகழ்வு நடைபெற்றது.
வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப்பணிப்பாளர் S.C.வீரசேகர உள்ளிட்ட அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
களனி கங்கையை அண்மித்த இடத்தில் அமைந்துள்ள இந்த விகாரை வலகம்மா மன்னரின் ஆட்சியில் நிர்மணிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.