ஆசிய ஹாக்கி சம்மேளன போட்டி: இறுதிச்சுற்றில் இலங்கை

ஆசிய ஹாக்கி சம்மேளன கிண்ண போட்டி: இறுதிச்சுற்றுக்கு இலங்கை தகுதி

by Staff Writer 15-03-2022 | 7:30 PM
Colombo (News 1st) இலங்கை அணி, ஆசிய ஹாக்கி சம்மேளன கிண்ண போட்டியில் (Asian Hockey Federation) இறுதிச்சுற்றுக்கு இன்று தகுதி பெற்றது. முதற்சுற்றில் கஸகஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றிபெற்றது. இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் இடம்பெறும் இந்த போட்டியில் இலங்கை அணி "A" குழுவில் விளையாடுகின்றது. இலங்கை அணி ஆரம்பச்சுற்றில் பங்குபற்றிய 03 போட்டிகளிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.