கொலையில் முடிந்த குடும்ப தகராறு

கொலையில் முடிந்த குடும்ப தகராறு

by Staff Writer 13-03-2022 | 2:29 PM
Colombo (News 1st) ரம்புக்கனை - ஹேனேபொல பகுதியில் ​பெண்ணொருவர் கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 62 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 65 வயதுடைய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.