அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

by Bella Dalima 09-03-2022 | 5:55 PM
Colombo (News 1st) அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை (09) முதல் அமுலுக்கு வரவுள்ளன. சில பொருட்களின் இறக்குமதியை குறைப்பதற்காக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சில அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப் பத்திரம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்காக வரி அதிகரிப்புடன் அனுமதிப்பத்திர நடைமுறையும் பின்பற்றப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ◼️ இறைச்சி மற்றும் மீன் உற்பத்திகள் ◼️ பால் சார்ந்த உற்பத்திகள் ◼️ பழங்கள் ◼️ மா சார்ந்த உற்பத்திகள் ◼️ உடனடி உணவு வகைகள் ◼️ சொக்லட் ◼️ பாஸ்தா வகைகள் ◼️ மதுபானம் உள்ளிட்ட பானங்கள் ◼️ சிகரெட் உள்ளிட்ட புகையிலை உற்பத்திகள் ◼️ வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட அழகுசாதன பொருட்கள் ◼️ வாய் சுகாதாரத்துடன் தொடர்புடைய தயாரிப்புகள் ◼️ மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகள் ◼️ இறப்பர் தயாரிப்புகள் ◼️ பயணப் பைகள் ◼️ தோல் தயாரிப்புகள் ◼️ கார்பட் ◼️ ஆடைகள் ◼️ காலணிகள் ◼️ குடைகள் ◼️ சீப்பு ◼️ செரமிக் தயாரிப்புகள் ◼️ கண்ணாடி தயாரிப்புகள் ◼️ மின்சாதன பொருட்கள் அல்லாத வீட்டுப் பாவனைப் பொருட்கள் ◼️ சமையலறை உபகரணங்கள் ◼️ கணினி பாகங்கள் ◼️ மூக்குக் கண்ணாடி ◼️ கடிகாரங்கள் ◼️ இசைக் கருவிகள் ◼️ விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்தவே புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.