உணவு விநியோகத்தில் உக்ரைன் போர் தாக்கம் செலுத்தும்

உலகளாவிய உணவு விநியோகத்தில் உக்ரைன் போர் தாக்கம் செலுத்தும் - யாரா நிறுவன தலைவர் எச்சரிக்கை

by Staff Writer 07-03-2022 | 5:09 PM
Colombo (News 1st) உலகளாவிய உணவு விநியோகம் மற்றும் விலையில் உக்ரைன் போர் பாரிய தாக்கத்தை செலுத்துமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகின் பாரிய விவசாய நிறுவனமான யாரா இன்டர்நெஷனல் நிறுவன தலைவரால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனம் 60 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கிவருவதுடன் ரஷ்யாவிலிருந்து கணிசமான அளவு அத்தியாவசிய மூலப்பொருட்களை கொள்வனவு செய்யும் நிறுவனமாகவும் காணப்படுகின்றது. மொத்த எரிவாயு விலை உயர்வால் உரங்களின் விலை ஏற்கனவே உயர்வடைந்துள்ளதாக யாரா நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன், நிலைமை மேலும் மோசமாகுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.