by Bella Dalima 04-03-2022 | 5:57 PM
Colombo (News 1st) பாகிஸ்தானின் பெஷாவர் நகரின் கிஸ்ஸா குவானி பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
மசூதியில் ஏராளமானவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடித்துள்ளது. இதனால், 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 50-இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் சிலர் மோசமான நிலையிலுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவொரு தற்கொலைக் குண்டுத்தாக்குதலாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
இருப்பினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.