பாராலிம்பிக்: ரஷ்யா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை

2022 குளிர்கால பாராலிம்பிக் போட்டியில் ரஷ்யா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை

by Staff Writer 03-03-2022 | 8:04 PM
Colombo (News 1st) பெய்ஜிங்கில் நாளை (04) நடைபெறவுள்ள 2022 குளிர்கால பாராலிம்பிக் போட்டியில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு சர்வதேச பாராலிம்பிக் குழு தடை விதித்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று (02) தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 141 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் பதிவாகியுள்ளன. தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை உள்ளிட்ட 34 நாடுகள் பங்கேற்றிருக்கவில்லை.