நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் 20 இலங்கையர்கள்

உக்ரைனிலிருந்து போலந்து ஊடாக நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் 20 இலங்கையர்கள்

by Staff Writer 27-02-2022 | 3:05 PM
Colombo (News 1st) உக்ரைனில் சிக்கியுள்ள 20 இலங்கையர்கள், போலந்து எல்லையூடாக உக்ரைனிலிருந்து வௌியேறும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக அங்காராவிலுள்ள இலங்கை தூதரம் அறிவித்துள்ளது. உக்ரைனிலிருந்து இலங்கைக்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் அவர்கள் போலந்து எல்லையில் காத்திருப்பதாக துருக்கி, ஜோர்ஜியா மற்றும் உக்ரைனுக்கான இலங்கை தூதுவர் எம்.ஆர். ஹசன் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் எல்லைப் பகுதி அதிகாரிகளுக்கு தௌிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இலங்கையர்கள் அனைவரையும் போலந்து ஊடாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தூதுவர் எம்.ஆர். ஹசன் கூறினார்.