by Staff Writer 24-02-2022 | 8:53 PM
Colombo (News 1st) மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (24) பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Torch Light-களை ஔிரச்செய்து பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சபைக்கு Torch Light ஒன்றை எடுத்துவந்தமை தொடர்பில் ஆளும் கட்சியினர் எழுப்பிய கேள்வி காரணமாக சபையில் வாதப் பிரதிவாதம் ஏற்பட்டது.
இதனால் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.