by Staff Writer 18-02-2022 | 3:41 PM
Colombo (News 1st) தங்காலை - வித்தாரந்தெனிய பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், அவரது வீட்டின் அருகில் ஹோட்டல் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிலரால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்ரபளின் மனைவி மற்றும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.