by Staff Writer 31-01-2022 | 5:50 PM
Colombo (News 1st) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மலையொன்றிலிருந்து தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பத்தனை - டெரிக்கிலாயர் தோட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுமார் 30 அடி உயரமான மலையிலிருந்து தலவாக்கலை - ஹட்டன் பிரதான வீதியில் வீழ்ந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள - பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.