by Staff Writer 27-01-2022 | 8:26 PM
Colombo (News 1st) திருகோணமலை எண்ணெய் குதங்களின் அபிவிருத்தி தொடர்பாக இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர், நிதியமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உயர் நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.
இந்த ஆட்சேபனைகளை மார்ச் மாதம் 11 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுக்களில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கலாநிதி P.B.ஜயசுந்தர, ஜனாதிபதி செயலாளராக தற்போது பதவி வகிக்காத நிலையில் பிரதிவாதிகளின் பெயர்ப்பட்டியலை திருத்துவதற்கு அனுமதி வழங்குமாறு மனுதாரர்கள் விடுத்த வேண்டுகோளுக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
எல்லே குணவங்ச தேரர் , பெங்கமுவே நாலக்க தேரர், தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் வக்கமுல்லே உதித்த தேரர் ஆகியோரினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.