by Bella Dalima 20-01-2022 | 7:04 PM
Colombo (News 1st) இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான சர்வசே T20 போட்டிகள் நடைபெறவுள்ள மைதானங்கள் மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் ஏற்படக்கூடிய உடலியல் அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டு அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச T20 தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ளது.
இந்த தொடரின் முதற்போட்டி அடுத்த மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முதல் இரண்டு போட்டிகள் சிட்னியிலும் மூன்றாவது போட்டி கன்பராவிலும் நடைபெறவுள்ளன.
இறுதி இரண்டு போட்டிகளும் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முன்னதாக இந்த போட்டிகள் குயின்ஸ்லாந்து மற்றும் அடிலெய்டில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.