by Staff Writer 15-01-2022 | 4:21 PM
Colombo (News 1st) பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நிவாரணப் பொதியை 3998 ரூபாவிற்கு சதொச ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
குறித்த பொதியில் 10 கிலோ சம்பா அரிசி, அரிசி மா, தேயிலை, சீனி, பருப்பு, மஞ்சள், மிளகாய் உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்குவதாகவும் வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதுமுள்ள சதொச விற்பனை நிலையங்களுக்கு ஒரு இலட்சம் பொதிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிவாரண பொதியை கொள்வனவு செய்வதன் மூலம், நுகர்வோருக்கு 1,750 ரூபா இலாபம் கிடைப்பதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
1998 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியை வீட்டிற்கே பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.