by Staff Writer 09-01-2022 | 3:19 PM
Colombo (News 1st) இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா தொகையுடன் சந்தேகநபரொருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் இன்று (09) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த வேனொன்றை பொத்துபிட்டிய பகுதியில் சோதனைக்கு உட்படுத்திய போது இந்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது 63 கிலோ 200 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வசமிருந்த 7 இலட்சத்துக்கும் அதிக பணமும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மொல்லிகொட பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா போதைப்பொருள் கடத்தற்காரரான ''பாணந்துறை சலிந்து" என்பவருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.