தெஹிவளை கடலில் முதலை தாக்கி ஒருவர் பலி

தெஹிவளை கடலில் முதலை தாக்கி ஒருவர் பலி

by Staff Writer 03-01-2022 | 3:02 PM
Colombo (News 1st) தெஹிவளை கடற்பிராந்தியத்தில் முதலையால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெஹிவளை கடலில் நீராடச் சென்ற 57 வயதான ஒருவரே இவ்வாறு முதலையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக களுபோவில போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார்.