சீன வௌிவிவகார அமைச்சர் ஜனவரியில் இலங்கை வருகிறார்

சீன வௌிவிவகார அமைச்சர் ஜனவரியில் இலங்கை வருகிறார்

by Staff Writer 30-12-2021 | 7:28 PM
Colombo (News 1st) சீன வௌிவிவகார அமைச்சர் Wang Yi எதிர்வரும் ஜனவரி மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் இன்று உறுதிப்படுத்தியது. சீன இலங்கை இராஜதந்திர தொடர்பின் 65 வருட பூர்த்திக் கொண்டாட்டம் வௌிவிவகார அமைச்சரின் வருகையுடன் ஆரம்பமாவதாக தூதரகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வருடத்தில் அவரின் முதலாவது வௌிநாட்டு விஜயத்தின் இறுதி இடமாக இலங்கை அமைந்துள்ளதாகவும் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.