by Staff Writer 26-12-2021 | 3:28 PM
Colombo (News 1st) தமது கோரிக்கை தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சருடன் நாளை (27) விசேட கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக இன்று (26) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவிருந்த தொடர் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்படுவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், ரயில் பயணச்சீட்டுகளை விநியோகிப்பதலிருந்தும் பொதிகளை பொறுப்பேற்பதிலிருந்தும் தொடர்ந்தும் விலகியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பற்ற ரயில் பெட்டிகளை போக்குவரத்தில் இணைத்துக்கொண்டமை, இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள ரயில் பெட்டிகளை போக்குவரத்தில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை கடந்த 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.