ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்து செய்தி

ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்து செய்தி

by Staff Writer 25-12-2021 | 5:04 PM
Colombo (News 1st) நத்தார் பண்டிகையின் போதான இயேசு கிறிஸ்துவின் அன்பின் நற்செய்தி, இலங்கை வாழ் கிறிஸ்தவ சகோதரர்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார். பாவத்தின் இருளை அகற்றும் இயேசு கிறிஸ்து போதித்த உன்னத பெறுமானங்கள், சமாதானம், கருணை, இரக்கம் போன்ற வழிகாட்டல்களின் மூலம் தவறான புரிதலை நீக்கப்பெற்ற சுபீட்சமான வாழ்க்கைநெறிக்கு வழிகாட்டுவதாக ஜனாதிபதி தமது நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இரண்டு வருட காலமாக தனிப்பட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நாடென்ற வகையில் பயிற்றுவிக்கப்பட்ட ஆன்மீகச் சிந்தனைகள் மற்றும் ஒழுக்கம் என்பன தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.