by Staff Writer 23-12-2021 | 12:01 PM
Colombo (News 1st) தம்புத்தேகம, அனுராதபுரம் மற்றும் மஹியங்கனை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.
தம்புத்தேகம - கோன்வெவ பகுதியில் வேன் ஒன்று உயரழுத்த மின்கம்பியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 67 வயது நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரம் - புளியங்குளம் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் 53 வயதானவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மஹியங்கனை - 48 ஆம் கட்டை பகுதிக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.