by Staff Writer 20-12-2021 | 2:23 PM
Colombo (News 1st) அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள், லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தந்திரிமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 44 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.