பெண்கள் மீதான வீட்டு வன்முறை பாதகமான செயல்

பெண்கள் மீதான வீட்டு வன்முறை பாதகமான செயல் - பரிசுத்த பாப்பரசர் 

by Staff Writer 20-12-2021 | 4:59 PM
Colombo (News 1st) பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறை மிகவும் பாதகமான செயலென பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கண்டனம் வௌியிட்டுள்ளார். இந்தாலிய வலையமைப்பு ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது அவர் இந்தக் கருத்துக்களை வௌியிட்டார். குடும்ப வன்முறைகளிலிருந்து தப்பிய ஒருவர் உட்பட வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட நால்வர் கொண்ட குழுவொன்றின் முன்னிலையில் பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தமது வீடுகளிலேயே தாக்கப்படுகின்ற மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற பெண்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமென பரிசுத்த பாப்பரசர் சுட்டிக்காட்டியுள்ளார். இது பெண்களை அவமானப்படுத்துகின்ற செயலென அவர் இதன்போது சாடியுள்ளார்.