திரைப் பயணத்தை கொண்டாடிய திரிஷா

திரைப் பயணத்தை கொண்டாடிய திரிஷா

by Bella Dalima 16-12-2021 | 4:29 PM
முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்த திரிஷா தனது திரைப் பயணத்தை கொண்டாடியிருக்கிறார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பதினைந்து வருடங்களுக்கும் மேலாக பேசப்படும் நடிகையாக இருந்தது சில்க் ஸ்மிதா மட்டும்தான். அதன் பிறகு கடந்த 20 ஆண்டுகளாக திரிஷா தனது திரைப்பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். மிஸ் சென்னையாக தெரிவு செய்யப்பட்ட திரிஷா, அதனைத் தொடர்ந்து சிம்ரன், பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக திரையுலக பயணத்தைத் தொடங்கினார். தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் வௌியாக தயாராக இருக்கின்றன. இந்த மகிழ்ச்சியை தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார் திரிஷா.