by Chandrasekaram Chandravadani 13-12-2021 | 10:16 PM
Colombo (News 1st) இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அவசர நிவாரணப் பொதியொன்றை வழங்குவது தொடர்பில் இந்திய அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக இந்திய வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வௌியிட்டுள்ளது.
உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நாணய மாற்று வசதி தொடர்பில் இந்தியா ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.
உணவு, மருந்து வகைகள், எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா வழங்கும் கடன் வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.