by Staff Writer 04-12-2021 | 7:42 PM
Colombo (News 1st) ஐந்தாவது இந்து சமுத்திர மாநாடு இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் அபுதாபியில் ஆரம்பமானது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.
மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று ஐக்கிய அரபு இராச்சியத்தை சென்றடைந்தார்.
அபுதாபி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை அந்நாட்டுக்கான இலங்கை தூதுவர் மல்ராஜ் டி சில்வா உள்ளிட்ட தூதரக பணிக்குழுவினர் வரவேற்றனர்.
இந்த விஜயத்தின் போது பல இருதரப்பு கலந்துரையாடல்களில் ஜனாதிபதி ஈடுபடவுள்ளார்.
சுற்றாடல், பொருளாதாரம், தொற்றுப்பரவல் என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆரம்ப உரையாற்றவுள்ளார்.
இதேவேளை, இந்து சமுத்திர மாநாட்டின் உறுப்பினராக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் தற்போது பாதாளத்தில் உள்ளதாக அங்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் Zoom ஊடாக நடைபெற்ற ஜனநாயகவாதிகளின் சங்க அமர்வில் உரையாற்றிய போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.