உர நிறுவனங்களை இணைத்து புதிய நிறுவனம் ஸ்தாபிப்பு

உர நிறுவனங்களை இணைத்து இராணுவத் தளபதியின் கீழ் புதிய நிறுவனம் ஸ்தாபிப்பு

by Staff Writer 03-12-2021 | 9:00 PM
Colombo (News 1st) இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிநடத்தலின் கீழ் பசுமை விவசாய மத்திய நிலையத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார். அரசாங்கத்தின் உர நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சேதனப் பசளை விநியோக நிறுவனமாக செயற்படுத்தும் பொருட்டு இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கனமான மற்றும் திரவ சேதன உர தயாரிப்புகளை அவற்றின் தரத்திற்கு அமைய ஊக்குவிப்பதும், விவசாயிகளுக்கு இலவசமாக உரத்தை பெற்றுக்கொடுப்பதும் இராணுவத்தளபதியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மத்திய நிலையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.