இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரோன்

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரோன்: இருவருக்கு தொற்று

by Bella Dalima 02-12-2021 | 6:50 PM
Colombo (News 1st) இந்தியாவிற்குள் ஒமிக்ரோன் (Omicron) வைரஸ் தொற்று நுழைந்துவிட்டதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்று (02) அறிவித்துள்ளது. வளர்ச்சியடைந்த கொரானோ வைரஸ் தொற்றாகக் கருதப்படும் ஒமிக்ரோன் தற்போது சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. உலகம் முழுவதும் ஒமிக்ரோன் வைரஸிற்கு 29 நாடுகளில் இதுவரை 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த கர்நாடகாவை சேர்ந்த 2 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் அவர்களுக்கு ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.