68 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

68 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

by Staff Writer 21-11-2021 | 3:02 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - அரியாலை கடற்பரப்பை அண்மித்த பகுதியில் இருந்து 68 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா, கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 229 கிலோ 350​ கிராம் நிறையுடைய கேரள கஞ்சா தொகை இதன்போது கைப்பற்றப்பட்டதாக கடற்படை அறிவித்துள்ளது. இன்று (21) அதிகாலை கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, டிங்கி படகொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த கேரள கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.