by Staff Writer 21-11-2021 | 4:12 PM
Colombo (News 1st) நீண்ட நாள் மீன்பிடியில் ஈடுபடும் மீனவப் படகொன்றிலிருந்து வீழ்ந்து காணாமற்போன மீனவரை தேடும் பணிகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 9 ஆம் திகதி மாகல்ல மீன்பிடி துறைமுகத்திலிருந்து மேலும் 6 பேருடன் கடற்றொழிலுக்கு சென்ற போதே குறித்த மீனவர் கடலில் வீழ்ந்து காணாமற்போயுள்ளார்.
மீனவர் வீழ்ந்து காணாமற்போன கடற்பிராந்தியத்தை அண்மித்து, கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ரத்கம பகுதியைச் சேர்ந்த 25 வயதான மீனவரே இவ்வாறு படகிலிருந்து வீழ்ந்து காணாமற்போயுள்ளார்.