by Staff Writer 16-11-2021 | 3:40 PM
Colombo (News 1st) அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8, 9 ஆம் தர மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நான்காம் கட்டத்தின் கீழ் குறித்த வகுப்புகளுக்கான மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுவதாக அறிக்கை ஒன்றினூடாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் 200 மாணவர்களுக்கும் குறைவான கனிஷ்ட பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் முதல் கட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து அனைத்து கனிஷ்ட பாடசாலைகள் மற்றும் தரம் 10, 11, 12, 13 மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.