இலங்கை அகதிகளை அழைத்து வந்த நால்வர் கைது 

இலங்கை அகதிகளை படகு மூலம் மன்னார் அழைத்து வந்த நால்வர் சென்னையில் கைது

by Staff Writer 16-11-2021 | 2:54 PM
Colombo (News 1st) இராமேஸ்வரத்திலிருந்து இலங்கை அகதிகளை படகு மூலமாக தாயகத்திற்கு அழைத்து வந்த நால்வர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். Q-பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. தமிழகத்திலுள்ள மறுவாழ்வு முகாம்களில் வசித்த மூன்று பேர் கடந்த 12 ஆம் திகதி படகு மூலமாக மன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கிடைத்த தகவலுக்கமையவே இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாம்பன் முந்தல்முனை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது. Q-பிரிவின் இராமநாதபுரம் கீழ் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.