by Staff Writer 16-11-2021 | 6:56 PM
Colombo (News 1st) அம்பாறை மாவட்டத்தில் பசும்பால் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணத்தால் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அம்பாறையில் சுமார் 10,000 பசுக்களிலிருந்து 20,000 முதல் 40,000 லிட்டர் பால் பெறப்பட்டு வந்தது.
தற்போது கடும் மழை பெய்து வருவதனால், கால்நடை பண்ணைகளிலும் மேய்ச்சல் தரைகளிலும் வௌ்ளநீர் தேங்கியுள்ளது.
இதனால் 10,000 லிட்டருக்கும் குறைவான பால் உற்பத்தியே கிடைக்கின்றது.